From the Desk of Principal
அன்புடையீர்.
தமிழ் வணக்கங்களும் வாழ்த்துக்களும்
கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி
அயர்லாந்து தமிழ் கல்விக்கழகத்தின் சிறார்களுக்கான தமிழ்ப்பள்ளி கடந்த 18 /10 /2020 அன்று முதல் தொடங்கப் பெற்று செம்மையாக நடைபெற்று வருகின்றன.
83 மாணவர்களும் 14 தன்னார்வலர் ஆசிரியர்களைக் கொண்டு ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்புகள் நடைபெறுகின்றன. குழந்தைகளின் வயது மற்றும் தமிழ் திறன் ஆகியவற்றைப் பொருத்து வகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கான தமிழ்ப் பாடப் புத்தகங்கள், பயிற்சி ஏடுகள், மற்றும் கையெழுத்து பயிற்சி ஏடுகள் ஆகியவை விரைவில் வினியோகிக்கப்படும்.
பெற்றோர்கள் உலக தமிழ் கல்விக்கழகத்தின் இணைய தளத்திற்கான கடவுச்சொல்லைப் பயன்படுத்தி இணையதளத்தில் உள்ள பாட நூல்களையும் பயன்படுத்தலாம்.
பெற்றோர்கள் தொடர்ந்து தங்கள் இல்லங்களிலும் தங்கள் குழந்தைகளோடு தமிழில் உரையாடுவதும் புதிய புதிய சொற்களை அறிமுகப்படுத்துவதும் குழந்தைகளின் தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாகும்.
மேலும் அயர்லாந்து தமிழ்க் கல்விக் கழகம் முன்னெடுக்கும் சிறார்களுக்குத் தமிழ் மொழிப் பயிற்சி, இளையோர் மற்றும் வயது வந்தோருக்குத் தமிழ் கலை, இலக்கியம், பண்பாட்டு விழுமியங்கள் தொடர்பான பயிற்சிப் பட்டறைகள் கருத்தமர்வுகள், மற்றும் ஆய்வுகள் ஆகியவற்றுக்கும் தங்களின் மேலான ஆதரவை வேண்டுகிறோம்.
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
என்றும் அன்புடன்
இராசகுமார் சம்பந்தம்
முதல்வர்
அயர்லாந்து தமிழ் கல்விக்கழகம்